சி ல் லி பா யி ன் ட்…

* இலங்கை – இந்தியா டி20 தொடர் இன்றுடன் முடிகிறது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆக. 2ல் ஆரம்பிக்கிறது. இதில் விளையாட உள்ள கேப்டன் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் அய்யர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா ஆகியோர் நேற்று கொழும்பு சென்றடைந்தனர். புதிய உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அபிஷேக் நாயரும் சென்றுள்ளார். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை பயிற்சியாளராகவும், வெஸ்ட் இண்டீசின் லீக் அணியான டிரின்பாகோ நைட் ரைடரஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

* வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த 3வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது (வெஸ்ட் இண்டீஸ் 282 & 175; இங்கிலாந்து 376 & 87/0). மார்க் வுட் ஆட்ட நாயகன் விருதும், கஸ் அட்கின்சன் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
n ஜிம்பாப்வே அணியுடன் பெல்பாஸ்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஜிம்பாப்வே 210 & 197; அயர்லாந்து 250 & 158/6. அயர்லாந்து கேப்டன் ஆண்டி பால்பிர்னி ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவர் முதல் இன்னிங்சில் 3 விக்கெட், 28 ரன் மற்றும் 2வது இன்னிங்சில் 4 விக்கெட், 55* ரன் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்தினார்.

* சென்னுக்கு பின்னடைவு
ஆண்கள் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்‌ஷியா சென் தனது முதல் சுற்றில் கவுதமாலா வீரர் கெவின் கார்டனை 21-8, 22-20 என நேர் செட்களில் வீழ்த்தியிருந்தார். இந்த நிலையில், காயம் காரணமாக கெவின் கார்டன் விலகியதை அடுத்து, ஒலிம்பிக் விதிகளின் படி லக்‌ஷியாவின் வெற்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பின்னடைவை சந்தித்துள்ள லக்‌ஷியா, ஜீரோவில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது