சில்லி பாய்ன்ட்…

* தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) தொடரின் சேலம் களத்துக்கான ஆட்டம் நேற்றுடன் முடிந்தது. இன்று போட்டியின் ஓய்வு நாள். அடுத்து கோவை களத்துக்கான ஆட்டம் நாளை தொடங்குகிறது.
* இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் 2004ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரைன் லாரா ஆட்டமிழக்காமல் 400ரன் குவித்தார். இச்சாதனை நிகழ்ந்து 20 ஆண்டுகள் கடந்த நிலையில் லாரா, ‘இந்த சாதனையை இந்திய வீரர்கள் சுப்மன் கில் அல்லது யாஷ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரால் மட்டுமே கடக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.
* லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடக்கின்றன. அவற்றில் டானில் மெத்வதேவ்(ரஷ்யா)- கார்லோஸ் அல்கராஸ்(ஸ்பெயின்), லொரென்சோ முசெட்டி(இத்தாலி)-நோவக் ஜோகோவிச்(செர்பியா) ஆகியோர் மோத உளளனர்.
* அமெரிக்காவின் அதிபர் இந்தியா வந்தபோது அகமதாபாத்தில் உள்ள குடிசைகள் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக சுவர்கள் எழுப்பியும், திரைகள் கட்டியும் மறைக்கப்பட்டது வரலாறு. இப்போது பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்காக வீடற்ற ஒரு லட்சம் மக்களை பாரிசில் இருந்து அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது.
* தமிழ் நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இம்மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து மாநில வாரியாக வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதன் கூடவே சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியும் நடைபெறும். இந்த தகவல்களை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ் நேற்று தெரிவித்தார்.

Related posts

கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேடும் பணி தீவிரம்

ஆகஸ்ட் 02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் இருந்த 2 உயரழுத்த மின் கோபுரங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு