சில்லி பாயின்ட்…

* இலங்கை யு-19 அணியுடன் அடுத்த வாரம் நடக்க உள்ள டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து யு-19 அணிக்காக முன்னாள் கேப்டன் மைகேல் வாஹனின் மகன் ஆர்ச்சி வாஹன் (18 வயது) அறிமுக வீரராகக் களமிறங்க உள்ளார். முன்னாள் நட்சத்திரம் ஆண்ட்ரூ ஃபிளின்டாப் மகன் ராக்கி ஃபிளின்டாப்பும் (16 வயது) இதே போட்டியில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
* கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே அணியிடம் 0-1 என தோற்ற அமெரிக்கா ஏமாற்றத்துடன் வெளியேறியது. மற்றொரு சி பிரிவு ஆட்டத்தில் பொலிவியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பனாமா அணி காலிறுதிக்கு முன்னேறியது.
* ‘கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலக கோப்பை போட்டித் தொடருடன் எனது 2 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில், ரோகித் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாலேயே டி20 உலக கோப்பை வரை பணியாற்றினேன். அதற்காக ரோகித்துக்கு நன்றி’ என தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
* டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி துணை கேப்டனும் வேகப் பந்துவீச்சாளருமான டஸ்கின் அகமது விளையாடவில்லை. ஆன்டிகுவாவில் நடந்த அப்போட்டியில் இந்தியா 50 ரன் வித்தியாசத்தில் வென்றது. வங்கதேச அணியின் பந்துவீச்சு வியூகம் விமர்சனத்துக்குள்ளானதுடன், பயிற்சியாளருக்கும் டஸ்கின் அகமதுவுக்கும் இடையே வெடித்த மோதல் காரணமாகவே அவர் நீக்கப்பட்டதாகவும் பேச்சு எழுந்தது. இந்த நிலையில், போட்டி நாளன்று டஸ்கின் நீண்ட நேரம் அசந்து தூங்கிவிட்டதாகவும், செல்போன் அழைப்புகளை எடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் கார்டியோவாஸ்குலர் டெக்னீஷியன்கள் பணி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்