சில்லி பாயின்ட்…


* யுஎஸ் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை மாளவிகா மன்சூட் (49வது ரேங்க்), 10-21, 21-15. 21-10 என் செட்களில் ஸ்காட்லாந்து வீராங்கனை கிறிஸ்டி கில்மோரை (22வது ரேங்க்) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 57 நிமிடத்துக்கு நீடித்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற பிரியன்ஷு ராஜ்வத், மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்ற திரிசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் காலிறுதியுடன் வெளியேறினர்.

* மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 600 ரன் கடந்த முதல் அணி என்ற உலக சாதனை இந்தியா வசமாகி உள்ளது. சென்னை டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன் குவித்து டிக்ளேர் செய்து இந்த சாதனையை படைத்துள்ளது. முன்னதாக, இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராக 1998ல் ஆஸ்திரேலியா 595 ரன் குவித்து ஆல் அவுட்டானதே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

* ஐக்கிய அரபு அமீரக அணி வீரர் முகமது உஸ்மான் (38 வயது) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நடுவரிசை பேட்ஸ்மேனான அவர் 38 ஒருநாள் போட்டியில் 1008 ரன் (அதிகம் 102*, சராசரி 31.50, சதம் 1, அரை சதம் 4) மற்றும் 47 டி20 போட்டியில் 891 ரன் (அதிகம் 89*, சராசரி 24.08, அரை சதம் 3) எடுத்துள்ளார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்