சில்லி பாயின்ட்…

* இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணலில் முன்னாள் தொடக்க வீரரும், கேகேஆர் அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீர் நேற்று ஆன்லைனில் கலந்துகொண்டார். இன்று 2ம் சுற்று நேர்காணல் நடைபெற உள்ளதாகவும், அதன் பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஸ்பெயின் அணிக்காக நட்சத்திர வீரர்கள் ரபேல் நடால் (38 வயது) – கார்லோஸ் அல்கராஸ் (21 வயது) இணைந்து களமிறங்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அல்கராஸ் கூறுகையில், ‘இது தான் நான் விளையாடப் போகும் முதல் ஒலிம்பிக் போட்டி. எல்லாமே எனக்கு புதிதாக இருக்கும். அனுபவ வீரரான நடாலிடம் இருந்து நான் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.

* வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியுடன் அம்பாந்தோட்டையில் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மகிந்தா ராஜபக்ச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 31 ஓவரிலேயே 92 ரன்னுக்கு பரிதாபமாக சுருண்டது. அடுத்து களமிறங்கிய இலங்கை 21.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 93 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே 50, கவிஷா தில்ஹாரி 28 ரன் விளாசினர். இலங்கை 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், கடைசி போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்