சில்லி பாயின்ட்…

* இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ள இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் ஸ்பின்னர் சாய்ராஜ் பகுதுலே (51 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் (1997-2003) விளையாடி உள்ளார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் கடந்த 3 ஆண்டுகளாக ‘பவுலிங் கோச் ’ ஆக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்திய டென்னிஸ் நட்சத்திரங்கள் லியாண்டர் பயஸ், விஜய் அமிர்தராஜ் இருவரும் சர்வதேச டென்னிஸ் ’ஹால் ஆஃப் பேம்’ பிரபலங்களாக கவுரவிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பை பெரும் முதல் ஆசிய டென்னிஸ் வீரர்கள் என்ற வரலாற்று சாதனை பயஸ், விஜய் அமிர்தராஜ் வசமாகி உள்ளது.

* இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 385 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 416 ரன், வெஸ்ட் இண்டீஸ் 457 ரன் குவித்த நிலையில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 425 ரன் குவித்து ஆல் அவுட்டானது (டக்கெட் 76, போப் 51, ரூட் 122, புரூக் 109). வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஜேடன் சீல்ஸ் 4, அல்ஜாரி ஜோசப் 2, ஷமார், ஹோல்டர், சின்க்ளேர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை