சிக்கிமில் பனிச்சரிவு 7 சுற்றுலா பயணிகள் பலி: 23 பேர் உயிருடன் மீட்பு

கேங்க்டாக்: சிக்கிமில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 23 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிம் மாநிலத்தின் நாதுலா பகுதி சீனா எல்லையில் அமைந்துள்ளது. இந்த பகுதியின் இயற்கை அழகு காரணமாக இது முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகின்றது. ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நாதுலாவில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. கேங்க்டாக் மற்றும் நாதுலாவை இணைக்கும் ஜவஹர்லால் நேரு மார்க்கின் 14வது மைல்கல் பகுதியில் காலை 11.30 மணிக்கு இந்த பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 30 சுற்றுலா பயணிகள், சில வாகனங்கள் சிக்கியதாக தெரிகின்றது. பனிச்சரிவு குறித்த தகவலின்பேரில் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது. மாலை 4 மணி வரை பெண், குழந்தை உட்பட 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. மேலும் 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பனிச்சரிவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை