மருத்துவமனையில் சித்தராமையா மனைவி

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா மனைவி, பார்வதிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை உடனடியாக பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். கடுமையான காய்ச்சல் இருந்ததால், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் டெல்லி செல்லும் பயணத்தை முதல்வர் ரத்து செய்தார். மனைவியின் உடல் நிலை தேறிவருவதாக தெரிவித்ததை தொடர்ந்து சித்தராமையா டெல்லி புறப்பட்டு சென்றார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்