சித்தராமையா மனைவிக்கு நில ஒதுக்கீடு உத்தரவு ரத்து

பெங்களூரு: மைசூரு மாநகர வளர்ச்சி குழுமம்(மூடா) சித்தராமையாவின் மனைவி பார்வதி பெயரில் இருந்த 3.16 ஏக்கர் நிலத்தை வீடுகள் கட்டுவதற்காக கைப்பற்றியது. அதற்கு பதிலாக மைசூரு நகரின் மையப்பகுதியில் 14 மனைகளை வெவ்வேறு அளவில் ஒதுக்கியது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலத்தை விட ஈடாக ஒதுக்கப்பட்ட வீட்டு மனையின் மதிப்பு கூடுதலாக இருந்ததால் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் அனுமதியுடன் மைசூரு லோக்ஆயுக்தா விசாரணையை துவங்கி உள்ளது. இந்த நிலமுறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடத்திருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறையும் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், சித்தராமையாவின் மனைவி பார்வதி மூடாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘ நிலத்தால் தேவையற்ற அரசியல் சர்ச்சைகள் நடப்பது வேதனையாக இருக்கிறது. எனவே எனக்கு ஒதுக்கப்பட்ட 14 வீட்டு மனைகளை மூடாவிடமே ஒப்படைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை ஏற்று சித்தராமையாவின் மனைவியின் பெயரில் நிலங்கள் ஒதுக்கியதை ரத்து செய்து மூடா ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹48 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் உயர்வால் வியாபாரிகள் அதிருப்தி

உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு

ரஷ்யா பீரங்கி தாக்குதலில் 7 பேர் பலி