குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்நலயில், நிதிக்கொள்கையை வெளியிட்டு இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும் வெளிநாடுகளில் பணவீக்க விகிதம் குறையாது. வெளிநாடுகளில் ஏற்படும் பாதிப்புகளை தாங்கும் அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. இந்தியாவின் தென்மேற்கு பருவமழை இவ்வாண்டில் இடத்துக்கு இடம் மாறுபட்டு பெய்துள்ளது என்று ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி கடந்த வருடம் மே மாதம் முதல் ரெப்போ விகிதத்தை உயர்த்தி வருகிறது. கடைசியாக பிப்ரவரி மாதம் ரெப்போ விகிதத்தை 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தியது. இதன் பின்பு நடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. சமீபத்தில் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் இன்று ஆர்பிஐ தனது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை