ஆளுநருக்கு எதிராக அந்தமானில் கடையடைப்பு போராட்டம்

போர்ட் ப்ளேயர்: மின் கட்டண உயர்வு, நில விலை உயர்வு, மனை பதிவு, எளிதாக தொழில் செய்வதற்கான கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அந்தமான் நிக்கோபர் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக ஆளுநர் தேவேந்திர குமார் ஜோஷி தலையிட கோரி பலமுறை மனு அளித்தனர். நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் அவருக்கு எதிராக 12 மணி நேரக் கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையொட்டி, போர்ட் ப்ளேயர் முழுவதும் வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

Related posts

ஜெட் விமான சோதனை ஓட்டம்: மயிலாடுதுறையில் நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!!

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி