கனடாவில் துப்பாக்கி சூடு: 2 குழந்தை உள்பட 5 பேர் பலி


ஒட்டாவா: கனடாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். கனடாவின் வடக்கே ஒன்டாரியோ நகரில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இதில் 2 குழந்தை உள்பட 5 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகம் தெரிவிக்கின்றது. இதுபற்றி சால்ட் மேரி போலீசார் கூறுகையில், ‘துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வந்த தகவலின் பேரில் விரைந்தோம். தான்கிரெட் தெருவில் 41 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்து கிடந்தார். தொடர்ந்து 10 நிமிடங்களில் மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்தது. உடனே சென்று பார்த்தபோது, துப்பாக்கி சூட்டிற்கான காயங்களுடன் 45 மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.

மேலும், 6 மற்றும் 12 வயதுடைய 2 பேரின் உடல்களும் காணப்பட்டன. அவர்களும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர். பின்னர், 44 வயது கொண்ட மற்றொரு நபரின் உயிரற்ற உடலும் கைப்பற்றப்பட்டது. அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருப்பது போன்று தெரிகிறது’ என்று தெரிவித்தனர். இந்த மரணங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என போலீசார் கூறினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த மாதம் ஒட்டாவாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

திமுக வழக்கறிஞர் அணி சார்பில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கருத்தரங்கம் :சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று, நாளை மற்றும் ஜூலை 15ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை முன் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விசாரணைக்கு ஆஜர்