மகா சிவராத்திரி: தோவாளை மலர் சந்தைகளில் பூக்கள் விலை உயர்வு.. கிலோ மல்லி ரூ.1,250, வில்வப்பூ ரூ.300க்கு விற்பனை..!!

குமரி: மகா சிவராத்திரியையொட்டி தோவாளை மலர் சந்தைகளில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மலர்ச்சந்தையில் ஒன்று தோவாளை மலர்சந்தை. இங்கு தமிழ்நாட்டில் உள்ள மதுரை, ராயாக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதிகளில் பூக்களின் வரத்து அதிகமாக இருக்கும். அதேபோல் உள்ளூர் பகுதிகளான குமாரபுரம், செம்பராபுதூர், தோவாளை பகுதிகளில் இருந்து பூக்கள் வரத்து இருக்கும்.

இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு தோவாளை மலர்சந்தையில் சிவனுக்கு உகந்த வில்வப்பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதேபோல் பிச்சி பூ, மல்லிகை பூ, அரளி பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.60 விற்கப்பட்ட வில்வப்பூ, இன்று ரூ.300க்கு விற்கப்படுகிறது. பிச்சி பூ ஒரு கிலோ ரூ.1000 முதல் ரூ.1,500 வரையும், மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.900 முதல் ரூ.1,250 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அரளி பூ கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ. 280க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகரித்தாலும் மக்கள் போட்டி போட்டு கொண்டு பூக்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால் வியாபாரம் சிறப்பாக உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு