சிவசங்கர் பாபா மீது பாலியல் புகாரளித்த மாணவியை காணொலி மூலம் ஆஜர் படுத்த ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்ககர் பாபா மீது புகார் அளித்த மாணவியை ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின்ஞ்சலில் புகார் அளித்த மாணவியை காணொலிக் காட்சி மூலம் ஆஜர்படுத்த சிபிசிஐடி-க்கு உத்தரவிட்ட நீதிபதி மாணவியை ஆஜர்படுத்தும் வரை விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என கூறியுள்ளார்.

சென்னை கேளம்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி நிர்வாகியாக பொறுப்பில் இருந்த சிவசங்கர் பாபா மீது அங்கு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் இவர் பாலியல் புகார் அளித்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் மீது 8க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. இந்த புகாரின் பெயரில் சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் மாணவி அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுஅளித்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆஸ்திரேலியாவில் இருந்து மாணவி அளித்த புகாரில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மின்னஞ்சலில் புகார் அளித்த மாணவியை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து மாணவியை ஆஜர்படுத்தும் வரை விசாரணைக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related posts

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12,763 கன அடியாக அதிகரிப்பு

டெல்லியில் அக்.5 வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு