தியாங்காங் விண்வெளி: ஷென்ஜோ-17 விண்கலம் மூலம் 3 வீரர்களும் விண்வெளிக்கு அனுப்பிய சீனா

விண்வெளியில் தாங்கள் கட்டமைத்து வரும் தியாங்காங் விண்வெளி நிலைய பணிகளுக்காக 3 வீரர்களை சீனா விண்ணுக்கு அனுப்பியுள்ளது. ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 2எஃப் ராக்கெட் மூலம், ஷென்ஜோ – 17 விண்கலத்தில் அவர்கள் விண்வெளிக்கு சென்றனர். தியாங்காங் விண்வெளி நிலையத்தை மேம்படுத்தும் பணிக்காக சுழற்சி முறையில் சீனா வீரர்களை அனுப்பிவருகிறது. தற்போது அனுப்பப்பட்டுள்ள 3 வீரர்களும், சுமார் 6 மாத காலம் விண்வெளியிலேயே இருந்து பணிகளை மேற்கொள்ள உள்ளனர். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சீனாவின் திட்டத்தில் இது 30-வது பயணமாகும்.

Related posts

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இந்திய அணி வீரர்கள்!!

வணிக விண்வெளி நடை பயணத்தை சாத்தியப்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ்..!!

நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்!!