5வது முறையாக வங்கதேச பிரதமராக பதவி ஏற்றார் ஷேக் ஹசீனா

டாக்கா: வங்கதேசத்தில் பிரதமராக ஷேக் ஹசீனா நேற்று 5வது முறையாக பதவி ஏற்றார். வங்கதேச நாட்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான பிஎன்பி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்த நிலையில் ஜன.7ம் தேதி நடந்த ஓட்டுப்பதிவில் ஆளும் அவாமி லீக் கட்சி தொடர்ந்து 4வது முறையாக அமோக வெற்றி பெற்றது. 300 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் அவாமி லீக் கட்சி 223 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பதவியேற்றார். ஹசீனாவுக்கு ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சரவை உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Related posts

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது