மீண்டும் படம் தயாரிக்கும் ஷார்மி

சென்னை: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஷார்மி கவுர். இவர் இயக்குனர் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து தெலுங்கு பல படங்களை தயாரித்தார். கடைசியாக அவர் தயாரித்த ‘லிகர்’ படம் பெரும் தோல்வியை சந்தித்தது. விஜய் தேவரகொண்டா, மைக் டைசன், அனன்யா பாண்டே நடித்த இந்த படம் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஷார்மி கவுரும், பூரி ஜெகன்னாத்தும் இணைந்து புதிய படத்தை அறிவித்துள்ளனர். 2019ம் ஆண்டு பூரி ஜெகன்னாத் இயக்கி வெற்றி பெற்ற ‘ஸ்மார்ட் சங்கர்’ என்ற படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு ‘டபுள் ஸ்மார்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். பூரி ஜெகன்னாத் இயக்குகிறார். ஸ்மார்ட் சங்கர் படத்தில் ராம் பொத்தனேனி, சத்யதேவ், நபா நடேஷ், நந்தினி அகர்வால் நடித்திருந்தார்கள்.

இரண்டாம் பாகத்திலும் ராம் பொத்தனேனியே ஹீரோவாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. “ஸ்மார்ட் ஷங்கரின் தொடர்ச்சியாக அடுத்த பாகமாக உருவாகவிருக்கும் இப்படம் முதல் பாகத்தை காட்டிலும், இரட்டிப்பு மாஸ் மற்றும் இரட்டிப்பு பொழுதுபோக்கைக் கொண்டிருக்கும் வகையில் ஒரு அதிரடியான கதையைப் பூரி ஜெகன்நாத் எழுதியுள்ளார். இது மிகப் பிரமாண்டமாக மிகப்பெரும் பட்ஜெட்டில் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் தயாரிக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி படத்தை வெளியிடும் வகையில் திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்”. என்கிறார் ஷார்மி.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது