ஷான்டோ அபார சதம்; வங்கதேசம் ரன் குவிப்பு

மிர்பூர்: ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 362 ரன் குவித்துள்ளது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு செய்தது. ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன் இருவரும் வங்கதேச இன்னிங்சை தொடங்கினர். ஜாகிர் 1 ரன்னில் வெளியேற, ஹசன் ஜாயுடன் நஜ்முல் உசேன் ஷான்டோ இணைந்தார். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 212 ரன் சேர்த்தது.

ஹசன் ஜாய் 76 ரன் (137 பந்து, 9 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினார். மோமினுல் ஹக் 15 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, ஷான்டோ 146 ரன் (175 பந்து, 23 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அமிர் ஹம்சா பந்துவீச்சில் நசீர் ஜமால் வசம் பிடிபட்டார். கேப்டன் லிட்டன் தாஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 362 ரன் குவித்துள்ளது. முஷ்பிகுர் ரகிம் 41 ரன், மெஹிதி ஹசன் மிராஸ் 43 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்