சங்கராபுரத்தில் ரூ.22 லட்சத்தில் சாலை பணி துவக்கம்

காரைக்குடி, ஏப்.19: காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி ஜெய்ஹிந்து நகர் மற்றும் கேகே நகர் பூங்கா வீதியில் சாலை அமைக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மற்றும் எம்எல்ஏ மாங்குடியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கையை தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன் நிதியில் ரூ.22 லட்சத்து 85 ஆயிரத்தில் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. சாலை பணிகளை ஊராட்சி தலைவர் தேவிமாங்குடி, மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், ஒன்றியகுழு உறுப்பினர் சொக்கலிங்கம், மாவட்ட பிரதிநிதி கணேசன், வார்டு உறுப்பினர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர், எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்ட தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து சாலை அமைக்க உரிய நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோல மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக சாலை, குடிநீர் தொட்டிகள், நாடக மேடை உள்பட பல்வேறு அத்தியவசிய பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மாவட்ட கவுன்சிலர் ராதாபால சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related posts

துறையூர் மூங்கில் தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் சிவன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சி அண்ணா நகர் கிளையில் கூட்டுறவு துறை பணியாளர் நாள்

திருவெறும்பூர் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது