சங்கராபுரம் பகுதியில் கோழி கொண்டை பூக்கள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே உள்ள வடபொன்பரப்பி மல்லாபுரம், பாப்பாத்திமூலை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய பங்காக விளங்கி வரும் நிலையில், பருவ கால பயிராக மட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் மாலை கட்டுவதற்கு பயன்படும் கோழி கொண்டை பூ வகை பயிர்களை தற்போது விவசாயிகள் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கிலோ 20 முதல் 35 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பூ விவசாயிகள் நலன் கருதி உரிய விலை கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஈரோட்டில் இன்று அதிகாலை கார் கவிழ்ந்து 2 இளம்பெண்கள் பலி

பல்வேறு வேடங்களில் அணிந்து குமரியில் காணிக்கை வசூலிக்கும் தசரா பக்தர்கள்: வெளி மாவட்டத்தினரும் வருகை

செஞ்சி சாலை பெரிய வாய்க்காலை தூர்வாரியபோது கிரேன் இயந்திரம் கவிழ்ந்து விபத்து; ஆபரேட்டர் படுகாயம்