சங்கராச்சாரியார் சாதுர்மாஸ்ய விரதம்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது பீடாதிபதியாக இருந்து வருபவர் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர். இவர், கடந்த 24ம் தேதி முதல் சாதுர்மாஸ்ய விரதத்தை தொடங்கியுள்ளார். இதனை, செப்டம்பர் மாதம் 18ம் தேதியுடன் நிறைவு செய்கிறார். காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையில் மகா பெரியவர் மணிமண்டபம் அருகே அமைந்துள்ள பூஜா மண்டபத்தில்  சந்திர மவுலீசுவரர் பூஜையுடன் சாதுர்மாஸ்ய விரதத்தை விஜயேந்திரர் தொடங்கினார்.
துறவியர் தங்களது ஆன்மீக பலத்தை பெருக்கி கொள்வதற்காக கடைப்பிடிக்கும் விரதமே சாதுர்மாஸ்ய விரதமாகும்.

இந்த, விரதநாட்களின்போது துறவியர்களை சந்தித்து அவர்களிடம் ஆசி பெறுவது சிறப்பாகும் என்பதால், தொடக்க நாளான்று திரளான பக்தர்கள் ஓரிக்கை மணி மண்டபத்திற்கு வந்து காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரிடம் ஆசி பெற்றனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்