போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு உபகரணங்களை போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு வழங்கினார் சங்கர் ஜிவால்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு உபகரணங்களை போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வழங்கினார். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை திறமையாக போக்குவரத்து விதிகளை அமல்படுத்துவதுடன் போக்குவரத்தை சீர் செய்வது, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற தொழில் நுட்பவசதிகளை மேம்படுத்துவதற்கு மிகவும் திறமையாக செயல்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, GCTP தற்போதுள்ள உபகரணங்களுடன் கூடுதலாக போக்குவரத்து சாதனங்கள் மற்றும் விழிப்புணர்வு காணொலிகள் திரைப்படங்களை வழங்கியுள்ளது, அதில்;

* E- சலான் இயந்திரம்: வாடகை அடிப்படையில் (மாதம் 300), 250 இ-சலான் இயந்திரங்கள் பெறப்பட்டு, சட்டத்தை திறம்பட அமல்ப்படுத்துவதற்கு கள அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.

* பேப்பர்ஸ்ட்ரா (ப்ரீத் அனலைசருக்கு): குடிபோதையில் வாகனம் ஓட்டுவதைக் கண்டறிய தினமும் சுமார் 10,000 பேப்பர் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது, 318750 பேப்பர் ஸ்ட்ராக்கள் வாங்கப்பட்டு கள அலுவலர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

* ரிப்ளக்டிவ்; ஜாக்கெட்: குறைந்த வெளிச்சம் மற்றும் அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளில் மேம்பட்ட பார்வை மற்றும் பாதுகாப்பிற்காக கள அதிகாரிகளால் ரிப்ளக்டிவ்; ஜாக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்1,500 ரிப்களெக்டிவ் ஜாக்கெட்டுகளை கொள்முதல் செய்து, அதில் 300 எண்கள் (பச்சை நிறம் ) அதிகாரிகளுக்கும், 1,200 எண்கள் (ஆரஞ்சு நிறம்) காவல் ஆளிநர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

* டிலினியேட்டர்;: சாலைகள் மற்றும் சாலைகளின் விளிம்புகளை சீரமைத்தல்/பிரித்தல் ஆகியவற்றைக் கண்டறிதல் தொடர்பாக சாலைகளின் சிறந்த மோட்டார் வாகண ஓட்டுனரின் பார்வைக்காக bypdpNal;lh; கள் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன. 354 டெலினேட்டர்கள் வாங்கப்பட்டுசாலைகளில் நிறுவப்பட்டுள்ளன .

* பிளாஸ்டிக் சிறிய தடுப்பு: ஏற்கனவே உள்ள தடுப்புகளை தவிர, 100 புதிய பிளாஸ்டிக் சிறிய தடுப்புகள் கொள்முதல்செய்ப்பட்டு, அவை தற்காலிக போக்குவரத்து மாற்றங்களுக்குபயன்படுத்தப்படுகின்றன.

* வாகன இன்டர்செப்டார் சிஸ்டம்;: தென்னிந்தியாவில் முதல் முறையாக , கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் உள்ள சென்னை நகரில் VIS (Vehicle Interceptor System) உடன் இணைக்கப்பட்ட இரண்டு ரோந்து வாகனங்கள்திறம்பட செயல்படுகின்றன. இந்த வெற்றிகரமான செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், போக்குவரத்து விதிமீறல்களைப் பிடிக்க 2டி ரேடார் அமைப்புடன் இயக்கப்பட்ட 360 டிகிரி சுழறக்கூடிய கேமராவைக் கொண்ட மேலும் ஒரு VIS கொண்டவாகனம் வாங்கப்பட்டு வடக்கு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

* போக்குவரத்து விழிப்புணர்வு காணொலி/திரைப்படங்கள் : பல்வேறு போக்குவரத்து சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள் தவிர, போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்த GCTP 12 விழிப்புணர்வு வீடியோக்கள்/ திரைப்படங்களை தயாரித்துள்ளது, மேலும் அவை சமூக ஊடகங்கள் மற்றும் திரையரங்குகள் மூலம் பதிவேற்றப்பட்டுஒளிபரப்பப்படும்.

* LED போக்குவரத்து சிக்னல் (மாண்புமிகு முதல்வர் அறிவிப்பு): போக்குவரத்து சிக்னல்களின் சிறந்த மற்றும் மேம்பட்ட பார்வைக்காக, குறிப்பாக இரவு நேரத்தில் கணிசமான தூரத்தில் இருந்துபார்ப்பதற்குஏதுவாக, 10 வருட பழைய சிக்னல்களில், 35 சிக்னல்கள் LED துருவ சிக்னல்களால் மாற்றப்பட்டுள்ளன.

* நேரடி போக்குவரத்து கண்காணிப்பு (முதல்வர் அறிவிப்பு): இந்த அமைப்பு தற்போதைய போக்குவரத்து சூழ்நிலைகள் மற்றும் சாலை வழிகளில் உள்ள நிலைமைகள் பற்றிய நிகழ்நேர தகவலை வழங்குகிறது மற்றும் போக்குவரத்து நெரிசல், சம்பவங்கள், பயண நேரம் போன்றவற்றைப் பற்றி GCTP அதிகாரிகள் மற்றும் சாலை பயனர்களுக்கு தெரிவிக்கிறது. நகரத்தில் 300 சந்திப்புகளுக்கு நேரடி போக்குவரத்து கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்கூறிய போக்குவரத்து காவல் சாதனங்கள் மற்றும் பொருட்களை போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வழங்கி, விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் கபில்குமார் சி.சரத்கர், போக்குவரத்து காவல் இணை ஆணையாளர், N.M.மயில்வாகனன், போக்குவரத்து காவல் துணை ஆணையாளர்கள் P.சரவணன், (வடக்கு), சக்திவேல் (தெற்கு), சமய்சிங் மீனா, (கிழக்கு) M.ராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை-2, பொறுப்பு-போக்குவரத்து திட்டமிடல்) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.4,19,359 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

விடியல் தந்த பயணம்

காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.105, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130 ஊக்கத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு