செய்யாறு அருகே பெருங்கட்டூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

*மளிகை கடைகாரர் கைது

செய்யாறு : செய்யாறு அருகே பெருங்கட்டூரில் மளிகை கடைக்காரர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வியாபாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். செய்யாறு போலீஸ் டிஎஸ்பி வெங்கடேசனுக்கு கிடைத்த தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் ஆலோசனைபடி மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி மற்றும் டிஎஸ்பி குற்றப்பிரிவு தடுப்பு போலீசார் பெருங்கட்டூர் கிராமத்தில் சீனிவாசன் என்பவரது மளிகை கடையில் சோதனையிட்டனர்.

பின்னர் அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டதில் நான்கு மூட்டைகளில் 55 பண்டல்களில், 50 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட 2,220 போதை பொருள் பாக்கெட்டைகளை இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அதனை பறிமுதல் செய்து அவற்றின் மதிப்பு ₹30 ஆயிரம் என தெரிவித்தனர். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி வழக்கு பதிவு செய்து மளிகை வியாபாரியான சீனிவாசனை(45) கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

ஆந்திராவுக்கு ரயில் மூலம் கடத்த முயன்ற 1413 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சிவகங்கை இளையான்குடியில் நேற்று விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்ததற்கு நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்

அனுமதியின்றி வேள்பாரி நாவலின் காட்சிகள் படமாக்கப்பட்டால் சட்ட நவடிக்கையை சந்திக்க நேரிடும்: இயக்குநர் ஷங்கர்