வக்கீலுக்கு பாலியல் தொல்லை காங். மாவட்ட தலைவர் கைது

கொடைக்கானல்: சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த 45 வயது பெண், உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவர் தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் கடந்த 7ம் தேதி கொடைக்கானலுக்கு சென்று, நாயுடுபுரம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். இந்த ஓட்டலின் உரிமையாளர் அப்துல் கனி ராஜா (50). இவர் கொடைக்கானல் ஓட்டல் ரிசார்ட் உரிமையாளர் சங்கத்தலைவராகவும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார்.

கடந்த 8ம் தேதி பெண் வக்கீலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஓட்டலின் உரிமையாளரான அப்துல் கனி ராஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்தார். அப்போது அப்துல் கனிராஜா, பெண் வக்கீலிடம் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில், அப்துல் கனி ராஜாவை, கொடைக்கானல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போலியான புகார் என்று அப்துல் கனி ராஜா தரப்பில் இருந்தும் கொடைக்கானல் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்

ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்