பூதாகரமாகும் பாலியல் சர்ச்சை.. நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை; மலையாள நடிகர் சங்கம் சிதறிவிடக் கூடாது: மவுனம் கலைத்த நடிகர் மோகன்லால்!!

திருவனந்தபுரம்: ஹேமா குழு அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டியது ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும்தான் என்று நடிகர் நடிகர் மோகன் லால் தெரிவித்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகள் மலையாள திரையுலகில் பூதாகரமாகி உள்ள நிலையில் மோகன்லால் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிய நடிகர் மோகன் லால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

பூதாகரமாகும் பாலியல் சர்ச்சை: நடிகர் மோகன்லால் பேட்டி
ஹேமா குழு அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டியது ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும்தான். மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’தான் சிறந்த திரைப்பட நடிகர் சங்கமாக செயல்பட்டது. நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து கூண்டோடு ராஜினாமா என்பது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் என மோகன்லால் தெரிவித்தார்.

நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை: நடிகர் மோகன்லால்
நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை; இங்கேதான் இருக்கிறேன். அம்மா திரைப்பட நடிகர்கள் சங்கத்துக்காக பல நல்ல பணிகளை செய்துள்ளோம். நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்ற முறையில் ஹேமா கமிட்டியிடம் எனது வாக்குமூலத்தை அளித்துள்ளேன். குற்றவாளிகள் கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், அதுவே காவல்துறையின் கடமை என்றார்.

மலையாள நடிகர் சங்கம் சிதறிவிடக் கூடாது: நடிகர் மோகன்லால்
பாலியல் குற்றச்சாட்டுகளால் அம்மா என்ற மொத்த திரைப்பட நடிகர்கள் சங்கம் சிதறிவிடக் கூடாது என அம்மா தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த பின்னர் மோகன்லால் முதன்முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பல கேள்விகளை புறக்கணித்த நடிகர் மோகன்லால் தான் எந்த பவர் குரூப்பிலும் இல்லை என்று கூறினார். ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையில் தெரிவித்த புகார்கள் நடந்திருக்கலாம். ஹேமா குழு அறிக்கையில் உள்ள புகார்களின் அடிப்படையில் அம்மா சங்கத்தை மட்டும் விமர்சிப்பது சரியல்ல. ஹேமா குழு அறிக்கை அடிப்படையிலான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என நடிகர் மோகன்லால் தெரிவித்தார்.

கேள்விகளுக்கு பதில் இல்லை: நடிகர் மோகன்லால்
செய்தியாளர்கள் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை என நடிகர் மோகன்லால் கூறியுள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் திரைத்துறையில் மட்டுமல்ல, பிற துறைகளிலும் உள்ளது. மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்கள் குறித்து விசாரிக்க அரசு குழு அமைத்துள்ளது; இதில் தனிப்பட்ட முறையில் நான் செய்ய எதுவுமில்லை. பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கையில் முழுமையாக என்ன இருக்கிறது என்று தெரியாது, எனக்கு தெரிந்ததை வைத்தே பேசியுள்ளேன் என்று மோகன்லால் கூறியுள்ளார்.

Related posts

100 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது