சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பள்ளி தாளாளர் பக்கிரிசாமி உடனடியாக கைது செய்யப்பட்டார்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பள்ளி தாளாளர் பக்கிரிசாமி உடனடியாக கைது செய்யப்பட்டார் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளி குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சம்பவம் தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரில் காவல்துறை துரித நடவடிக்கை எடுத்துள்ளது. எனக்குத் தெரியவில்லை; டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என நான் கூற மாட்டேன். மாவட்ட குழந்தைகள் நல அலுவலரும் விசாரணை நடத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!