பாலியல் வழக்கில் 4வது புகார் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மீண்டும் போலீஸ் காவல்: நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா மீது நான்காவது பாலியல் வழக்கு பதிவாகிய நிலையில் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஹாசன் தொகுதி மஜத முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது இதுவரை மூன்று பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நான்காவது ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பெங்களூரு சிஐடி அலுவலகத்தில் கடந்த வாரம் தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ள நிலையில் கடந்த வாரமே போலீசார், பிரஜ்வல் ரேவண்ணா மீது நான்காவது வழக்கு பதிவு செய்தனர்.

பிரஜ்வல் ரேவண்ணா மட்டுமின்றி ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த பாஜ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரிதம் கவுடா உள்ளிட்ட மேலும் இருவர் தனது வீடியோவை வைத்து மிரட்டியதாகவும் அதை பகிர்ந்ததாகவும் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா மீது நான்காவது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவான நிலையில் நேற்று மீண்டும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு செய்யப்பட்டது. இரு தரப்பு வாதம் கேட்டபின் வரும் 29ம் தேதி வரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Related posts

ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைதானவர் மருத்துவமனையில் இருந்து துணை தாசில்தார் ஓட்டம்

நேபாள கம்யூனிஸ்ட் ஆதரவு வாபஸ் நேபாளத்தில் மீண்டும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி: பிரதமர் பிரசந்தா பதவி விலக மறுப்பு

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தமிழ்நாட்டில் 3,650 மருத்துவ இடங்கள் பறி போய் விடும்: சபாநாயகர் அப்பாவு கவலை