பாலியல் வழக்கு: ராஜேஸ்தாஷ் மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடியின் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20,500 அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ராஜேஸ்தாஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு`க்கள் மீது விசாரணை நடைபெற்று வருகின்றன.

இதனிடையே இந்த வழக்கை வேறுமாவட்டத்துக்கு மாற்றக்கோரி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், வரும் 24ம் தேதிக்குள் வழக்கை முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து சிறப்பு டிஜிபி தங்கள் தரப்பு வாதத்தை தெரிவிக்க விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி நேற்று நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டிஜிபி நேரில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாக தெரிவித்தார். இதனைகேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை இன்று (19ம் தேதி) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related posts

சொல்லிட்டாங்க…

நேரடியாக களத்தில் இறங்க சின்ன மம்மி எடுத்திருக்கும் முடிவு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

அயோத்தி கோயில் திறப்புவிழா; ராகுல் விமர்சனத்திற்கு பா.ஜ கடும் கண்டனம்