பாலியல் தொழில் நடத்திய புரோக்கர் கைது: 6 பெண்கள் மீட்பு

பூந்தமல்லி: போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் புஷ்பா நகரில், பிரஸ்டீஜ் ஸ்பா என்ற அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக ஆவடி காவல் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று இரவு அழகு நிலையத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பாலியல் தொழில் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அழகு நிலையத்திலிருந்த ஐயப்பன்தாங்கலை சேர்ந்த அனுப்பிரியா (32), முகப்பேரை சேர்ந்த கார்த்தி யாழினி (23), பட்டாபிராம் பகுதியை சேர்ந்த யோகஸ்ரீ (21), சாலிகிராமத்தை சேர்ந்த பவித்ரா (28), அசோக் நகரை சேர்ந்த ஷர்மிளா (34), கே.கே.நகரை சேர்ந்த வினோதினி (21) ஆகியோரை போலீசார் மீட்டனர். பின்னர், புரோக்கர் பாடிகுப்பம் பகுதியை சேர்ந்த பவுன்சர் தினேஷ் (43) என்பவரை கைது செய்தனர்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐயப்பன்தாங்கலில் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு அருகே வாடகைக்கு வீடு எடுத்து இருபாலருக்குமான அழகு நிலையம் தொடங்கியுள்ளனர். அழகு நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழிலும் செய்து வந்துள்ளனர். குறிப்பாக, வெளியூரிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களை குறிவைத்து அழகு நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து வந்துள்ளனர். பின்னர் அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி யுள்ளனர். அழகு நிலையத்தை பவுன்சர்கள் சிலர் நடத்தி வந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து புரோக்கர் உட்பட 6 பெண்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசு காப்ப கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தினேஷை புழல் சிறையில் அடைத்தனர். தப்பிய கூட்டாளிகள் தினேஷ், ஜெயக்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்