காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்!

சென்னை: காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். காவிரி ஆற்றில் கழிவு நீர் கலந்து வருவதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து இறையன்பு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இதனை அடுத்து, தலைமைச் செயலாளர் இறையன்பு, கர்நாடக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், காவிரியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும் என கர்நாடக அரசுக்கு தலைமை செயலாளர் இறையன்பு வலியுறுத்தியுள்ளார். முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது என புகார் எழுந்துள்ளது. பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது.

இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது. இவ்வாறு முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது எனத் தெரிவித்துள்ளார். எனவே, காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி