சேத்திருப்பு நடுநிலைப்பள்ளியில் தேசிய ஒற்றுமை நாள் விழா

 

கொள்ளிடம், நவ.4: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சேத்திருப்பு நடுநிலைப்பள்ளியில் தேசிய ஒற்றுமை நாள் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, ஆசிரியர்கள் சந்திரன்,கணேசன், சுந்தரி,தன்னார்வலர்கள் சுஜிதா, விஷாலி,சத்துணவு அமைப்பாளர் சத்யா,சமையலர் செல்வி மற்றும் பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்..

அதனைத்தொடர்ந்து தலைமையாசிரியர் பாலு மாணவர்களிடம் கூறுகையில், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழிமாணவ மாணவியர்களால் எடுக்கப்படுகிறது.  தேசிய உறுதி மொழியை தெலுங்கு மொழியில் பிதிமாரிவெங்கட்சுப்பா ராவ் எழுதி உள்ளார் என்றார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்