பூரிக்கட்டை, கரண்டியால் சரமாரி தாக்கி 9 வயது சிறுமியை கொடுமைப்படுத்திய கொடூர சித்தியிடம் தீவிர விசாரணை

அண்ணாநகர்: பூரிக்கட்டை, கரண்டியால் சரமாரியாக தாக்கி சிறுமியை கொடுமைப்படுத்திய கொடூர சித்தியிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். தாராபுரம் அடுத்த பொன்னாவரத்தை சேர்ந்தவர் ரமேஷ்(34). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவி கீர்த்தனா(32). இவர்களுக்கு ருத்திதா(9) என்ற மகள் உள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷுக்கும் கீர்த்தனாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதன்பிறகு ருத்திதாவை ரமேஷ் வளர்த்து வருகிறார். அங்குள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு கோவை மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தனா(34) என்ற பெண்ணை ரமேஷ் 2வது திருமணம் செய்துகொண்டார்.

இவர் மூலம் தனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து கடந்த 5 வருடங்களாக 2வது மனைவி, மற்றும் முதல் மனைவியின் பெண் குழந்தையுடன் முகப்பேர் மேற்கு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார். கடந்த 27ம் தேதி சித்தி கீர்த்தனா, முதல் மனைவியின் மகளான ருத்திதாவை பூரிக்கட்டையாலும் கரண்டியாலும் அடித்து கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார். இதனால் பயந்துபோன ருத்திதா வீட்டை வீட்டு வெளியே சென்று அங்கு உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மின் மோட்டார் அறையில் பதுங்கி இருந்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி பார்த்து அந்த சிறுமியை மீட்டு பார்த்தபோது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட தகவல்படி, நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியை மீட்டனர்.

பின்னர் சென்னை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் காஞ்சனா, ஜோயல் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து சிறுமியிடம் விசாரணை நடத்திவிட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நொளம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமியின் தந்தை ரமேஷ், சித்தி கீர்த்தனா ஆகியோர் மீது 341 சட்டவிரோதமாக தடுத்தல், 324 காயம் விளைவித்தல், 326 ஆயுதங்களால் கொடுங்காயம் விளைவித்தல், சிறார் நீதிச் சட்டம் 2007 பிரிவு 75 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

இந்திய விமான படை சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடக்கம்!

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக கோயில், கட்டிடங்கள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

இலங்கை அதிபர் தேர்தல்; புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க!