தொடர் விடுமுறையையொட்டி ஒருநாள் சுற்றுலா திட்டம் பொதுமக்கள் ஆர்வம்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சுற்றுலா பயணத்திட்டத்தின் கீழ் சென்னை-மாமல்லபுரம், காஞ்சிபுரம்- மாமல்லபுரம், புதுச்சேரி ஆகிய 1 நாள் பயண சுற்றுலா மேற்கொள்ள நேற்று வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலா பேருந்துகள் மூலம் பொதுமக்கள் ஆர்வமாக சென்றனர். காஞ்சிபுரம்- மாமல்லபுரம் சுற்றுலா பயணத்திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம், மாமல்லபுரம், முட்டுக்காடு படகு இல்லம் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு காலை, மதியம் சைவ உணவு, படகு சவாரி ஆகியவற்றுடன் குளிர் சாதன வசதி கொண்ட பேருந்துக்கு ரூ.2,000, குளிர் சாதன வசதி இல்லா பேருந்துக்கு ரூ.1,800 ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் புதுச்சேரி சுற்றுலா திட்டத்தில் அரவிந்தர் ஆசிரமம், அருங்காட்சியகம், கடற்கரை, ஆரோவில், முதலியார்குப்பம் படகு குழாம் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ள குளிர் சாதன வசதி கொண்ட பேருந்துக்கு ரூ.2,000, குளிர் சாதன வசதி இல்லா பேருந்துக்கு ரூ.1,850ம் கட்டணம். சென்னை – மாமல்லபுரம் சுற்றுலா பயண திட்டத்தில் ஏசி பேருந்துக்கு ரூ.1,000 ஏசி வசதி இல்லா பேருந்துக்கு ரூ.800ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாணவர்கள் ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டால் நீக்கப்படுவர்: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலை.

உண்மையை அறியாமல் கள்ளச்சாராய மரணம் என்பதா?.. இறப்பிலும் எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அமைச்சர் ரகுபதி கண்டனம்..!!

டிஎன்பிஎல் டி.20 தொடர் இன்று தொடக்கம்; சேலத்தில் முதல் போட்டியில் சேப்பாக்-கோவை மோதல்