தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 23 பேருக்கு குண்டாஸ்: காவல் துறை நடவடிக்கை

சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்களில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 23 பேரை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னையில் கடந்த 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை, கஞ்சா உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த 23 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ைகது செய்தனர்.

அதன்படி, கொருக்குப்பேட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட முருகன் (24), நீலாங்கரையை சேர்ந்த ரஞ்சித் (24), அண்ணாநகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ராபட் (28), ஆதம்பாக்கம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட தமிழரசன் (எ) விக்கி (30), பழவந்தாங்கல் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பரத்குமார் (எ) பரத் (23), திரிசூலம் பகுதியை சேர்ந்த அருண் (எ) அருண்குமார் (23), கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (22), ஆர்.கார்த்திக் (23),

மதுரவாயல் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28), மதுரவாயல் பகுதியை சேர்ந்த ராகேஷ் ராஜா (24), சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த நாகராஜ் (34), அப்பு (32), பூக்கடை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராயபுரத்தை ேச்ாந்த ரவிச்சந்திரன் (59), திருவான்மியூர் பகுதியை சேர்ந்த விக்கி (22), கொருக்குப்பேட்டையை சேர்ந்த முரளி (எ) ஜீவா (35), கிண்டி பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த சைலேந்தர் (எ) சைலு (30),

மடிப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நன்மங்கலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (எ) மணி (34), சூளைமேடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கிஷோர் குமார் (21), கார்த்திகேயன் (25), புழல் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட மணி (எ) சஞ்சய் (21), சங்கர் கணேஷ் (எ) சங்கர் (44), சந்திரகுமார் (எ) சந்துரு (39) உள்ளிட்ட 23 பேரை, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி