செப்டம்பர் 11ம் தேதி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் அஞ்சலி: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: இந்திய சுதந்திர போராட்ட வீரரும், தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டவருமான தியாகி இம்மானுவேல் சேகரனர் நினைவு தினத்தையொட்டி செப்.11ம் தேதி அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து சிறை சென்றவரும், சமூக சேவை மேற்கொள்வதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவும் தனது ராணுவ பணியை துறந்தவரும், பன்மொழிப்புலவருமான இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாளான செப்.11ம் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்