பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் கைது: பஞ்சாப் மக்களுக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர் பகவந்த்சிங் மான்

சண்டிகர்: காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை கைது செய்ய ஒத்துழைப்பு அளித்த பஞ்சாப் மக்களுக்கு நன்றி என்று அம்மாநில முதல்வர் பகவந்த்சிங் மான் கூறியுள்ளார். காலிஸ்தான் இயக்கத்தின் நிருபுனர் பிந்த்ரன்வாலாயின் சொந்த ஊரான ரோட் என்ற இடத்தில் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்ட பிறகு வீடியோ ஒன்றை வெளியிட்ட முதல்வர் பகவந்த்சிங் மான் சனிக்கிழமை இரவு முழுவதும் தூங்காமல் போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறினார்.

15 நிமிடங்களுக்கு ஒருமுறை போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கைது நடவடிக்கையில் தவறு நேரிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டதாக கூறினார். குருத்வாரா சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் உயிர் பலி ஏதும் ஏற்படக்கூடாது என்று கூறியதாக மான் தெரிவித்தார். இதனிடையே அம்ரித்பால் சிங் கைதுக்கு பிறகு மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்காமல் இருக்க போலீஸ் கோடி அணி வகுப்பு நடத்தப்பட்டது. மெகாலே என்ற இடத்தில் போலீசார் அணி வகுத்து சென்றனர்.

Related posts

சட்டசபையில் விவாதிக்காமல் வெளிநடப்பு; அதிமுக ஆடும் நாடகத்தால் திமுகவை அசைக்கவே முடியாது: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு; ஊழல் வழக்கில் கைதான துணைவேந்தருக்கு ஒரு ஆண்டு பதவிக்காலத்தை நீட்டித்த ஆளுநர்: கல்வியாளர்கள் அதிருப்தி

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ஜூலை 5ல் ஆர்ப்பாட்டம்: மீனவர் சங்கங்கள் அறிவிப்பு