செந்தூர்ஃபின் கார்ப் பங்குதாரர் சொத்து ஆவணங்களை அளிக்க ஆணை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நிதி நிறுவன மோசடி வழக்கில் செந்தூர்ஃபின் கார்ப் பங்குதாரர் பாரதி ரூ.4 கோடி சொத்து ஆவணங்களை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி தில்லைநகர் பகுதியில் செந்தூர் ஃபின்கார்ப் என்கிற நிதி நிறுவனம் இயங்கியது. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் தினமும் குறிப்பிட்ட தொகையும் ஒரு வருடத்திற்கு பிறகு முழுத்தொகையும் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது.

அந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் தினமும் ரூ.900 லாபம் தருவதாகக் கூறியதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். அப்படி முதலீடு செய்தவர்களுக்கு முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப ரூ.300 முதல் ரூ.900 வரை தினமும் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்தனர். பணம் செலுத்தியது முதல் 30 நாட்களுக்கு சரியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணம் 30 நாட்களுக்கு பின்பு வராமல் இருந்துள்ளது.

செந்தூர் நிதி நிறுவனத்தினர் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். அவர்களிடமிருந்து நாங்கள் செலுத்திய தொகையை திரும்ப பெற்று தர வேண்டும். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையின் அடிப்படையில் செந்தூர் ஃபின் கார்ப் பங்குதாரர் பாரதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அதிக வட்டி தருவதாக நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட செந்தூர் ஃபின் கார்ப் பங்குதாரர் பாரதி ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார்.

வழக்கில் பங்குதாரர் பாரதிக்கு ஐகோர்ட் கிளை நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது. மறு உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. நிபந்தனைகளை மீறும்பட்சத்தில் ஜாமீனை ரத்து செய்து வழக்குப்பதிவு செய்யவும் ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. செந்தூர் ஃ பின் கார்ப் உள்ளிட்ட பல பெயர்களில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக மனுவில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

Related posts

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!