செந்தில்பாலாஜி மீதான நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

புதுடெல்லி: நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில் செந்தில்பாலாஜி மீதான நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஒய்.பாலாஜி என்பவர் தாக்கல் செய்த புதிய மனுவில், ‘செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை விசாரணை நீதிமன்றம் மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் தற்போது வரையில் நிலுவையில் உள்ளது. மேலும் அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்யுள்ளது.

அதில், ‘இந்த வழக்கில் தொடர்புடைய 73 அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் செந்தில்பாலாஜி மீதான நடவடிக்கைக்கு ஒப்புதல் ஆளுநரிடம் நிலுவையில் இருந்து வந்த நிலையில், அதற்கான ஒப்புதல் தற்போது கிடைத்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது. மேலும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட ஆவணங்களின் நகல்களையும் இந்த பதில் மனுவில் தமிழ்நாடு அரசு இணைத்துள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு