செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்..!!

சென்னை: செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா? என்பதை ஐகோர்ட் முடிவெடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தன்னால் விசாரிக்க முடியாது என சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது சிறப்பு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்தை நாட உத்தரவிட்ட நிலையில் விசாரிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உயர் நீதிமன்றம் அருகே திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்