செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை விவகாரத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என்று தெரிவித்து கடந்த மே.15ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா தலைமையில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் முன்னதாக நடந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு ஏன் இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது என்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்