செந்தில் பாலாஜி எத்தனை மணிக்கு கைது செய்யப்பட்டார், யார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்: ஐகோர்ட் நீதிபதி கேள்வி

சென்னை: செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது அடுத்த ஒரு மணி நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. காவேரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மீது உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

செந்தில் பாலாஜி கைது: நீதிமன்றம் கேள்வி

செந்தில் பாலாஜி எத்தனை மணிக்கு கைது செய்யப்பட்டார், யார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் என்ன வழக்கு உள்ளது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நள்ளிரவு 1.39க்கு செந்தில் பாலாஜி கைது: அமலாக்கத்துறை

அதற்கு அமலாக்கத்துறை தரப்பில், நள்ளிரவு 1.30 மணிக்கு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார், நாங்கள்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். இஎஸ்ஐ மருத்துவர்கள் அறிக்கையில் கருத்து வேறுபாடு உள்ளது, நியாயமான அறிக்கை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜாமீன் கோரவில்லை; சிகிச்சையே கோருகிறோம்: இளங்கோ வாதம்

ஆட்கொணர்வு மனுவில் ஜாமீன் கோரவில்லை; சிகிச்சைக்கு மருத்துவமனையை மாற்றதான் கோருகிறோம் என்று இளங்கோ தெரிவித்தார்.

எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதனைக்கு தயார்: இளங்கோ வாதம்

நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜிக்கு உடனடியாக அவசர இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ அறிக்கையை அமலாக்கத்துறை ஏற்கவில்லை. டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்து பரிசோதிக்கட்டும். டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதிக்க ஆட்சேபனை இல்லை. மதுரையில் இருந்து அல்ல டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் வரட்டும் என்று இளங்கோ தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி உடல்நிலையை கவனிப்பது எங்கள் பொறுப்பு: அமலாக்கத்துறை

நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி உடல்நிலையை கவனிப்பது எங்கள் பொறுப்பு என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்டவை இயல்பாகவே இருந்தது என்றும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

நீதிமன்ற காவலிலேயே சிகிச்சை தர வேண்டும்: இளங்கோ வாதம்

தற்போதைய நிலையில் நீதிமன்ற காவலிலேயே காவேரி மருத்துவமனையில் சிகிச்சை தர வேண்டும் என்று இளங்கோ வாதிட்டார். செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர் என்று கூறினார்.

செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது: இளங்கோ வாதம்

கைது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்காததால் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது தான் என்று இளங்கோ வாதிட்டார். ரிமாண்ட் செய்ததில் சட்டவிரோதம் இருந்தால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மணி நேரத்தில் தீர்ப்பு:

ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்றது. நேற்று ஆட்கொணர்வு மனு விசாரிக்கப்படாத காரணத்தினால் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அமலாக்கத்துறை விதியின் படி கைது செய்யப்பட்டவர், அவரின் குடும்பத்தினரிடம் கையெழுத்து பெறவேண்டும் என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஒரு மணி நேரத்தில் தீர்ப்பு என கூறியுள்ளார்.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!