மும்பை: 6000 புள்ளிகளுக்கு மேல் நேற்று சரிவடைந்த சென்செக்ஸ், தொடக்க நேர வர்த்தகத்தின்போது 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 1154 புள்ளிகள் உயர்ந்து 73,232 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 360 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 22,245 புள்ளிகளை தொட்டு வர்த்தமாகி வருகிறது.