செங்குன்றம், சோழவரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்எல்ஏ பங்கேற்பு

புழல்: செங்குன்றம், சோழவரம் ஆகிய பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டார். செங்குன்றம் அடுத்த, பம்மதுகுளம் ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் எம்.ராஜா தலைமை தாங்கினார். சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர், சுதர்சனம் எம்எல்ஏ மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து இருப்பிட சான்று, வாரிசு சான்று, சாதி சான்று, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

முகாமில், பம்மதுகுளம், லட்சுமிபுரம், கோணிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லையம்மன் பேட்டை, எரான்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினார்கள். இதில், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன், வில்லிவாக்கம் ஒன்றிய திமுக செயலாளர் தயாளன், திமுக நிர்வாகிகள் கரலப்பாக்கம் ராஜேந்திரன், வி.பி.அண்ணாதுரை, ராமகிருஷ்ணன், பத்மநாபன், திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட பாடியநல்லூர், அலமாதி ஆகிய 3 ஊராட்சிகளுக்கும் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமுக்கு சோழவரம் ஒன்றிய குழு துணைத் தலைவர் வே.கருணாகரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்வாணன், அமிர்தவல்லி டில்லி, ஜெயலட்சுமி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

3 ஊராட்சிகளில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3000க்கும் மேற்பட்ட மனுக்கள் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இந்த முகாமில் தொகுதி எம்எல்ஏ சுதர்சனம், பொன்னேரி சார்-ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் ஆகியோர் கலந்து கொண்டு அங்கிருந்த அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு பொதுமக்களின் மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து சான்றுகளை வழங்க உத்தரவிட்டார். முகாமில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தினி பார்த்தசாரதி மற்றும் ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்