பாஜ மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

டெல்லி: பாஜ மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு (96) வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவு மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவருக்கு வீட்டிலேயே மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி இரவு திடீரென அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் 27ம் தேதி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் அத்வானிக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கையில், ‘பாஜ மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல் நிலை சீராக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்வானியின் உடல்நிலை குறித்து பாஜ தலைவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்து வருகிறார்கள்.

 

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை!

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது