இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா மூத்த தளபதி பலி


பெய்ரூட்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் காசாவை மையம் கொண்டிருந்த நிலையில், தற்போது ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவளித்து வரும் லெபனானில் மையம் கொண்டுள்ளது. லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல்கள் நடந்த நிலையில், நேற்று இஸ்ரேல் ராணுவம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இதில் ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார். இது தவிர மேலும் 7 பேர் பலியாகினர்; 59 பேர் காயமடைந்தனர். கடந்தாண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளைத் தாக்கும் மூன்றாவது பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும்.

Related posts

ஆம்பூரில் மேம்பால பணியின்போது சாரம் சரிந்து விபத்து

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முக்கிய ரவுடி புதூர் அப்பு டெல்லியில் அதிரடி கைது

வனத்திற்குள் இழுத்து சென்று பெண், சிறுவனை கொன்ற சிறுத்தை: ராஜஸ்தான் கிராமத்தில் பீதி