5 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் 56 மூத்த வக்கீல்கள் நியமனம்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை கையாளும் விதமாக வழக்கறிஞர்கள் இருப்பார்கள். இதில் ஒரு மனுவை தாக்கல் செய்ய வேண்டுமானால் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர் (ஏ.ஓ.ஆர்) என்பவர் மிகவும் முக்கியம். அவரது கையெழுத்து இல்லாமல் எந்த மனுவையும் தாக்கல் செய்ய முடியாது. இவர்களது பணி காலத்தை அடிப்படையாக மூத்த வழக்கறிஞர்களாக உச்ச நீதிமன்றம் அவர்களை பரிந்துரைத்து நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கும். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மூத்த வழக்கறிஞர்களை நியமனம் செய்யாமல் உச்ச நீதிமன்றம் இருந்து வந்தது.

இந்தநிலையில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான முழு நீதிபதிகள் கொண்ட அமர்வின் ஆலோசனை கூட்டம் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மொத்தம் 56 வழக்கறிஞர்கள் மற்றும் ஏ.ஓ.ஆர்களை மூத்த வழக்கறிஞர்களாக நியமித்து முடிவு செய்து உத்தரவிடப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் கையாண்டு வரும் அமித் ஆனந்த் திவாரி, ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோரும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்