செங்கை, காஞ்சி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் டெபிட் கார்டு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஆகிய இடங்களில்நடந்த தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஆயிரத்திற்கான வங்கி புத்தகம் மற்றும் ஏடிஎம்டெபிட் கார்டு ஆகியவற்றை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கழைகலகத்தின் தமிழ்ப்புதல்வர் திட்டத்தில் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது. அதில்,செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 107 பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 6,387 மாணவர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000க்கான வங்கி அட்டைகளை தமிழக குறுசிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்புதல்வன் என்று அச்சிடப்பட்ட வங்கி ஏடிஎம் அட்டை வழங்கப்பட்டது. மேலும், வங்கி அட்டை வழங்கிய மாணவர்களுக்கு மாதாமாதம் அவர்களுடைய வங்கி கணக்கிற்கு நேரடியாக ரூ.1000 செலுத்தப்படும் என்றார். இந்நிலையில், நேற்று நடந்த துவக்க விழாவில் 1000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், ‘தமிழ்புதல்வன்’ திட்டம் பெயர் அச்சிடப்பட்ட பிரத்யேக ஏடிஎம் டெபிட் கார்டு, மற்றும் தமிழ்பெருமிதம், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகங்கள் அடங்கிய வெல்கம் கிட் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், எம்எல்ஏகள் வரலட்சுமி மதுசூதனன், பாலாஜி, மாவட்ட குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், நகர்மன்ற தலைவர்கள் சண்முகம், கார்த்திக் தண்டபாணி, முன்னாள்‌ எம்எல்ஏ மூர்த்தி, நகர் செயலாளர் நரேந்திரன், ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் ஒன்றிய குழுத்தலைவர் உதயா கருணாகரன், சமூகநலத்துறை அலுவலர் சங்கீதா, செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு தனியார் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு பற்று அட்டை மற்றும் வெல்கம் கிட் ஆகியவைகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசுகையில், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ரூபாய் 1000, மாணவர்களின் பட்டப்படிப்பு முடியும் வரை அவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும். இங்கு வருகை புரிந்துள்ள மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் வழங்கப்பட்டுள்ள பற்று அட்டை செய்யப்பட்டுள்ளது. பணம் வங்கி கணக்கில் வரப்பெற்ற விவரம் கைப்பேசியில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கப்படும்.

இத்திட்டத்தினை, அனைத்து மாணவர்களும் நல்ல வகையில் பயன்படுத்தி கொண்டு தங்கள் படிப்பின் மீது முழு கவனம் செலுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் கூறினார்.
இதற்கு முன்னதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தினை தொடங்கப்பட்ட நிகழ்வினை நேரடி ஒளிபரப்பு மூலம் காணொளி காட்சி வாயிலாக திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதாஞானசேகர், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா, திருப்புலிவனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சுகுமாறன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்