புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கருத்தரங்கம்: திமுக அறிவிப்பு

சென்னை: ஒன்றிய பா.ஜ.க. அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் “கருத்தரங்கம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திமுக சட்டத்துறை சார்பில் ஜூலை 20, மாலை 4 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அருகே ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பில், என்.ஆர்.இளங்கோ எம்.பி. தலைமையில் கருத்தரங்கம் நடைபெறும் என என்.ஆர்.இளங்கோ அறிவித்துள்ளார். கருத்தரங்கில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் தவறாது பங்கேற்கவேண்டும். புதிய குற்றவியல் சட்டங்கள் இந்தியாவின் நீதி பரிபாலனம், மாநில சுயாட்சி, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. புதிய குற்றவியல் சட்டங்கள் ஜனநாயக நாடான இந்தியாவை காவல்துறை ஆட்சி நாடாக மாற்றிவிடும் எனவும் கூறினார்.

Related posts

ஊர், ஊராக அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டு சிறை

போடி அருகே யானை மிதித்து முதியவர் உயிரிழப்பு..!!

வயநாடு நிலச்சரிவு: மீட்பு பணியின்போது அருவியில் சிக்கிய 3 இளைஞர்கள் மீட்பு..!!