செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்ட உள்ளதால் நாளை உபரி நீர் திறக்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவு

செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்ட உள்ளதால் நாளை உபரி நீர் திறக்க காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை 100 கன அடி நீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

பொன்னேரியில் உள்ள எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைக்கு சீல் வைப்பு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை: புதிய பணிக்காக சாலைகளை தோண்டக் கூடாது என உத்தரவு