மாவோயிஸ்ட் தலைவரின் உறவினரின் மருத்துவ படிப்புக்கு வழங்கிய ரூ.1கோடி பறிமுதல்

புதுடெல்லி: பீகாரின் மகத் மண்டலத்தில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பான சிபிஐக்கு நிதி திரட்டுவதற்காக அதன் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட சதி தொடர்பாக கடந்த 2021ம் ஆண்டு என்ஐஏ தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கின் ஒரு பகுதியாக என்ஐஏ நடத்திய சோதனையில் நேற்று ரூ.1,13,70,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது மாவோயிஸ்ட் தலைவரின் நெருங்கிய உறவினரின் மருத்துவ கல்விக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில்,” பீகார் மற்றும் ஜார்கண்டில் உள்ள ஒப்பந்ததாரர்களிடம் இருந்து மாவோயிஸ்ட்கள் மிரட்டிபணம் பறித்துள்ளனர். இதில் ரூ.1.13 கோடி சென்னையில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது.
குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் நெருங்கிய உறவினர்களின் வங்கி கணக்குகள் மூலமாக இந்த பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ” என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்